ஃபைவ் ஸ்டார் பிஸ்னஸ் ஃபைனான்ஸ் லிமிடெட்டின் இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங் (ஐபிஓ) வரும் நவம்பர் 09, 2022 அன்று துவங்கவுள்ளது, அதில் ஒரு ஈக்விட்டி பங்கின் விலை வரம்பு ₹450 முதல் ₹474 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் வங்கி அல்லாத நிதி நிறுவனமான ஃபைவ் ஸ்டார் பிஸ்னஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் (“நிறுவனம்”) தனது முதல் பப்ளிக் ஆஃபரை (பொது வழங்கல்) துவங்கவுள்ளது, ஒரு ஈக்விட்டி பங்கின் விலை வரம்பை ₹450 முதல் ₹474 வரை நிர்ணயித்துள்ளது. இந்த நிறுவனத்தின் இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங் (“ஐபிஓ” அல்லது “ஆஃபர்”) புதன்கிழமை, நவம்பர் 09, 2022 அன்று முதல், சந்தா மூலம் பெறுவதற்கு துவங்கி, வெள்ளிக்கிழமை, நவம்பர் 11, 2022 அன்று நிறைவடைகிறது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 31 ஈக்விட்டி பங்குகளை ஏலம் கோரலாம், அதன் பிறகு 31-இன் மடங்குகளாக ஈக்விட்டி பங்குகளை கோரலாம்.
இது நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள பங்குதாரர்கள் மூலம் மொத்தமாக Rs. 1960 கோடி விற்பனைக்கான ஒரு ஆஃபர் ஆகும்.
SCI இன்வெஸ்ட்மென்ட்ஸ் V மூலம் Rs. 166.74 கோடியும்; மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் இந்தியா இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் II, LLC மூலம் Rs. 719.4 கோடியும்; மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் இந்தியா இன்வெஸ்ட்மென்ட்ஸ் II எக்ஸ்டென்ஷன் மூலம் Rs. 12.08 கோடியும்; நார்வெஸ்ட் வென்ச்சர் பார்ட்னர்ஸ் வென்ச்சர் மூலம் Rs. 361.4 கோடியும், TPG ஏசியா VII SF பிரைவேட் லிமிடெட் மூலம் Rs. 700.3 கோடியும் இந்த விற்பனைக்கான ஆஃபரில் உள்ளது.
ஃபைவ் ஸ்டார் பிஸ்னஸ் ஃபைனான்ஸ் நிறுவனம், குறு-தொழில்முனைவோர் மற்றும் சுயதொழில் செய்வோருக்கு பாதுகாக்கப்பட்ட வர்த்தகக் கடன்களை வழங்குகிறது; அந்நிறுவனங்கள் ஒவ்வொன்றும் பெரும்பாலும் பாரம்பரியமான நிதி நிறுவனங்களால் விலக்கப்படுபவையாகும்.
தென்னிந்தியாவில் தனக்கென ஒரு வலுவான இருப்பைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், கடன் பெறுவோரின் சொத்துக்களைக் கொண்டு பாதுகாக்கப்பட்ட முறையிலேயே அனைத்து கடன்களையும் வழங்கி வருகிறது; முக்கியமாக அவை கடன் பெறுவோர் தாமே வசிக்கும் குடியிருப்பு சொத்துக்களாகும் (SORP). ஒப்பிடப்பட்ட சக நிறுவனங்களுடன் பார்க்கையில், 2018-22 நிதியாண்டில் 50% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் (CAGR), நான்காவது வேகமான AUM (நிர்வாகத்தின் கீழுள்ள சொத்துக்கள்) வளர்ச்சியைக் கொண்டுள்ள நிறுவனமாகும். ஜூன் 30, 2022-உடன் முடிவடைந்த மூன்று மாதங்களுக்கு, நிறுவனத்தின் 95% கடன் போர்ட்ஃபோலியோவில் ₹0.1 மில்லியன் முதல் ₹1.0 மில்லியன் வரையில் அசல் தொகையிலான கடன்கள் உள்ளன, அவற்றின் சராசரி டிக்கெட் அளவு ₹0.29 மில்லியன் ஆகும்.
மார்ச் 31, 2022 நிலவரப்படி, நிர்வாகத்தின் கீழுள்ள சொத்து (AUM) Rs. 5100 கோடியாகும், இதுவே மார்ச் 31, 2021 காலத்தோடு ஒப்பிடுகையில் Rs. 4400 கோடியாக இருந்தது. ஜூன் 30, 2022 நிலவரப்படி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோவில் 85% கொண்டிருந்தன. மார்ச் 2022 நிலவரத்தின்படி, ஒப்பிடப்பட்ட சக நிறுவனங்களோடு பார்க்கையில், ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங்கிற்கு (85.6%) பிறகு, 75.2% என்கிற கேபிடல் அடிக்குவசி விகிதத்துடன் ஃபைவ் ஸ்டார் பிஸ்னஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஜூன் 30, 2022 நிலவரப்படி, இந்நிறுவனம் 311 கிளைகளைக் கொண்ட நெட்வொர்க்குடன், 150 மாவட்டங்களில், 8 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் செயல்படுகிறது. 6077 ஊழியர்கள் என்கிற மனித வளத்துடன், நிதியாண்டு 2018-இல் நேரடி கணக்குகள் (லைவ் அக்கவுன்ட்கள்) 33,157 என்ற எண்ணிக்கையிலிருந்து, ஜூன் 30, 2022-வரை 230,175 ஆக அதிகரித்துள்ளது. கூடுதலாக, 2,250 ரிலேஷன்ஷிப் அலுவலர்கள் உட்பட 2,550 ஊழியர்களைக் கொண்ட வர்த்தகம் மற்றும் கலெக்ஷன் குழுவினரும் இந்நிறுவனத்தில் உள்ளனர்.
ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட், விஸ்டார் பைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், வெரிடாஸ் ஃபைனான்சியல் அண்ட் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், அய் ஃபைனான்ஸ், லெண்டிங்கார்ட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், டிஜிக்ரெடிட் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் அண்ட் AU ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், ஆவாஸ் ஃபைனான்சியர்ஸ் லிமிடெட், ஹோம் ஃபர்ஸ்ட் ஃபைனான்ஸ் கம்பெனி இந்தியா, மற்றும் ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங் ஃபைனான்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்களுடன் ஃபைவ் ஸ்டார் பிசினஸ் ஃபைனான்ஸ் போட்டியிடுகிறது.
நிதியாண்டு 2021-இல் Rs. 1051.25 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருமானம், நிதியாண்டு 2022-இல் 19.49% வளர்ச்சியைப் பெற்று Rs. 1256.16 கோடியாக உள்ளதாக NBFC பதிவிட்டுள்ளது; அதே நேரத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் நிதியாண்டு 2021-இல் Rs. 358.99 கோடியிலிருந்து நிதியாண்டு 2022-இல் Rs. 453.54 கோடியாக உயர்ந்துள்ளது.
நிறுவன செயல்பாடுகளிலிருந்து வருவாய் அதிகரித்ததன் காரணமாக, ஜூன் 30, 2021-உடன் முடிவடைந்த மூன்று மாதங்களில், Rs. 300.75 கோடியாக இருந்த மொத்த வருமானம், ஜூன் 30, 2022-இல் 12.74% அதிகரித்து Rs. 339.05 கோடியாக உயர்ந்துள்ளது. ஜூன் 30, 2021-உடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் Rs. 101.57 கோடியாக இருந்த வரிக்குப் பிந்தைய லாபம், ஜூன் 30, 2022-உடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் 37.28% அதிகரித்து Rs. 139.43 கோடியாக உயர்ந்துள்ளது.
‘IIFL செக்யூரிட்டீஸ் லிமிடெட்’ இந்த ஐபிஓ வழங்கலை நிர்வகிக்கும் ஒரே புக் ரன்னிங் லீட் மேனேஜர் நிறுவனமாகவும், ‘லிங்க் இன்டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ இந்த வழங்கலுக்கான பதிவாளராகவும் செயல்படுகிறது.