ஏர் இந்தியா, 24 கூடுதல் விமானங்களுடன் உள்நாட்டு இணைப்பை பலப்படுத்துகிறது
பெருநகரம் முதல் பெருநகர இணைப்பை அதிகரிக்க நெட்வொர்க் விரிவாக்கம்
புது தில்லி, இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர் இந்தியா,
ஆகஸ்ட் 20, 2022 முதல் தனது உள்நாட்டு நெட்வொர்க்கில் 24 புதிய விமானங்களை
உயர்த்துவதாக இன்று அறிவித்துள்ளது. அதன் உள்நாட்டு இணைப்பின் விரிவாக்கம்
இந்தியாவின் முக்கிய பெருநகரங்களுக்கிடையில் அதிகரித்து வரும் போக்குவரத்தை பூர்த்தி
செய்யும் மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் வசதியான பயணத்தை எளிதாக்கும்.
மேலும் அதிக விமானங்கள் சேவைக்கு திரும்பியதால் உள்நாட்டு இணைப்பை
வலுப்படுத்துவது செயல்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் 24 விமானங்களில் டெல்லியில் இருந்து மும்பை, பெங்களூரு மற்றும் அகமதாபாத்,
மற்றும் மும்பையில் இருந்து சென்னை மற்றும் ஹைதராபாத் வரை இரண்டு புதிய
வரத்துக்களும், மும்பை-பெங்களூரு மற்றும் அகமதாபாத்-புனே வழித்தடத்தில் ஒரு புதிய
வரத்தும் அடங்கும்.
இந்தச் சேர்த்தல், விமானப் பயணிகளுக்கு பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் முக்கிய
பெருநகரங்களுக்கு இடையே அதிக பயண விருப்பங்களை வழங்கும், மேலும் டெல்லி –
மும்பை இடையே ஒவ்வொரு வழியிலும் 10 விமானங்கள், டெல்லி – பெங்களூரு இடையே
ஒவ்வொரு வழியிலும் 7 விமானங்கள், மும்பை பெங்களூரு இடையே ஒவ்வொரு வழியிலும் 4
விமானங்கள், மற்றும் மும்பை-சென்னை, மும்பை – ஹைதராபாத் மற்றும் டெல்லி –
அகமதாபாத் வழித்தடங்களில் தலா 3 விமானங்கள் ஆக ஏர் இந்தியாவின் தினசரி
வரத்துக்களை எடுத்துச்செல்லும்.
நெட்வொர்க் விரிவாக்கம் குறித்து, ஏர் இந்தியாவின் எம்.டி மற்றும் சி.இ.ஓ., திரு. கேம்ப்பெல்
வில்சன் கூறுகையில், “இந்த விரிவாக்கம் முக்கிய பெருநகரங்களுக்கிடையேயான
தொடர்பை உயர்த்துகிறது , மேலும் ஏர் இந்தியாவின் உள்நாட்டு மற்றும் சர்வதேச
நெட்வொர்க்குகளுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துகிறது. கடந்த ஆறு
மாதங்களாக, ஏர் இந்தியா, விமானங்களை மீண்டும் சேவைக்கு அனுப்ப எங்கள்
கூட்டாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது, மேலும் இந்த முயற்சி இப்போது
பலனளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் “என்று கூறினார்.
ஏர் இந்தியாவின் குறுகிய கட்டமைப்பு விமானத்தொகுதி தற்போது 70 விமானங்களைக்
கொண்டுள்ளது, அவற்றில் 54 தற்போது சேவை செய்யக்கூடியவை. இந்த மீதமுள்ள 16
விமானங்கள் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் படிப்படியாக சேவைக்குத் திரும்பும்.
விமானம் சேவைக்குத் திரும்பியதால், முக்கிய வழித்தடங்களில் சேர்க்கப்பட்ட 24
விமானங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

மேலும் தகவலுக்கு, www.airindia.in ஐப் பார்க்கவும்
ஏர் இந்தியா பற்றி:
புகழ்பெற்ற ஜே.ஆர்.டி டாடாவால் நிறுவப்பட்ட ஏர் இந்தியா இந்தியாவின் விமானப்
போக்குவரத்துத் துறையில் முன்னோடியாக இருந்தது மற்றும் விமான நிறுவனத்தின் வரலாறு
உண்மையில் இந்தியாவில் சிவில் விமானப் போக்குவரத்தின் ஆண்டு நிகழ்வு வரலாற்றிற்கு
ஒத்ததாக உள்ளது. அக்டோபர் 15, 1932 இல் அதன் முதல் விமானத்தில் இருந்து, ஏர்
இந்தியா அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பா, தூர கிழக்கு, தென்கிழக்கு ஆசியா,
ஆஸ்திரேலியா மற்றும் வளைகுடா முழுவதும் ஒரு பெரிய சர்வதேச விமான நிறுவனமாக
அதன் இறக்கைகளை விரித்துள்ளது.இந்தியாவின் வடகிழக்கு, லடாக், அந்தமான் &
நிக்கோபார் தீவுகளின் தொலைதூரப் பகுதிகள் உட்பட, இந்த விமான நிறுவனம் விரிவான
உள்நாட்டு நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது.ஏர் இந்தியா, ஜூலை, 2014 முதல் மிகப்பெரிய
உலகளாவிய விமானக் கூட்டமைப்பான ஸ்டார் அலையன்ஸில் உறுப்பினராக உள்ளது.
இந்தியாவின் முதல் சர்வதேச பட்ஜெட் கேரியர் ஆன ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், 2005 இல்
தொடங்கப்பட்டது, இது குறுகிய மற்றும் நடுத்தர தூர இயக்க வழித்தடங்களில், தாங்கத்தகு
சேவைகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, சிறிய நகரங்களை நேரடியாக வளைகுடா
மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளுக்கு இணைக்கிறது.அரசுக்கு சொந்தமான நிறுவனமாக
இருந்த 69 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை
ஜனவரி 2022 இல் டாடா குழுமத்தால் மீண்டும்
கையகப்படுத்தப்பட்டன.கையகப்படுத்துதலுக்குப் பிறகு, கலவரையறைக்குட்பட்ட
மாற்றத்தின் மைல்கற்கள் வகுக்கப்பட்டு, ஏர் இந்தியா மீண்டும் உலகத் தரம் வாய்ந்த விமான
நிறுவனமாக வெளிப்படுவதை உறுதிசெய்யும் வகையில், அதை அடைவதற்கான தொடர்
நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன
டாடா குழுமம் பற்றி:
1868 ஆம் ஆண்டில் ஜம்செட்ஜி டாடாவால் நிறுவப்பட்ட டாடா குழுமம் ஒரு உலகளாவிய
நிறுவனமாகும், இது இந்தியாவில் தலைமையிடமாக கொண்டு பத்து நிலைகளில் 30
நிறுவனங்களை உள்ளடக்கியது. குழுவானது ஆறு கண்டங்களில் 100க்கும் மேற்பட்ட
நாடுகளில் ‘நம்பிக்கையுடன் கூடிய தலைமைத்துவத்தின் அடிப்படையில் நீண்டகால
பங்குதாரர் மதிப்பை உருவாக்குவதன் மூலம், உலகளவில் நாங்கள் சேவை செய்யும்
சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்’ என்ற நோக்கத்துடன் இயங்குகிறது.
டாடா சன்ஸ் முதன்மை முதலீட்டு நிறுவனமாகவும் டாடா நிறுவனங்களின் வளர்ச்சி
ஊக்குவிப்பாளராகவும் உள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில்
அறுபத்தாறு சதவிகிதம், கல்வி, சுகாதாரம், வாழ்வாதார உருவாக்கம் மற்றும் கலை மற்றும்
கலாச்சாரத்தை ஆதரிக்கும் பரோபகார அறக்கட்டளைகள் கொண்டுள்ளன. 2020-21ல், டாடா
நிறுவனங்களின் வருவாய், 103 பில்லியன் டாலர் (INR 7.7 டிரில்லியன்) ஆக இருந்தது. இந்த
நிறுவனங்கள் கூட்டாக 800,000 பேருக்கு மேல் வேலை அமர்த்தியுள்ளது .ஒவ்வொரு டாடா
நிறுவனமும் அல்லது ஸ்தாபனமும் அதன் சொந்த இயக்குநர்கள் குழுவின் வழிகாட்டுதல்
மற்றும் மேற்பார்வையின் கீழ் சுயாதீனமாக இயங்குகிறது. டிசம்பர் 31, 2021 நிலவரப்படி, 29
பொதுப் பட்டியலில் பட்டியலிடப்பட்ட டாடா நிறுவனங்கள், மொத்த சந்தை மூலதனம் $314
பில்லியன் (INR 23.4 டிரில்லியன்) உடன் உள்ளன. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா
மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா கெமிக்கல்ஸ், டாடா நுகர்வோர் தயாரிப்புகள், டைட்டன்,
டாடா கேபிடல், டாடா பவர், டாடா கம்யூனிகேஷன்ஸ், இந்தியன் ஹோட்டல்ஸ், டாடா
டிஜிட்டல் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் அடங்கும்.