ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் ஆனது, ஐசிஐசிஐ ப்ரூ கேரண்டீட் பென்ஷன் பிளான் பிலெக்ஸி என்ற புதிய வருடாந்திர திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது

ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் ஆனது, ஐசிஐசிஐ ப்ரூ  கேரண்டீட்  பென்ஷன்  பிளான்  பிலெக்ஸி அறிமுகப்படுத்தியுள்ளது, இது வழக்கமான பிரீமியம் செலுத்தும் வருடாந்திர திட்டம்  ஆகும், இது வாடிக்கையாளர்களுக்கு நீண்டகாலமாக ஓய்வூதிய சேமிப்பை முறையாகச் சேமிக்கவும் கட்டமைக்கவும் உதவுகிறது. ஒரு சேமிப்புக்குவியலை உருவாக்குவதற்கு, வாடிக்கையாளர்களின் வழக்கமான பங்களிப்புகளை வழங்குவதற்கும், நிதி ரீதியாக சுயாதீனமான ஓய்வுபெற்ற வாழ்க்கையை வாழ, வாழ்நாள் முழுவதும் உத்தரவாதமான வருமானத்தைப் பெறுவதற்கும், இந்த தயாரிப்பு, குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஐசிஐசிஐ ப்ரூ  கேரண்டீட்  பென்ஷன்  பிளான்  பிலெக்ஸி, ஏழு வகைகளில் கிடைக்கிறது, விரைவுபடுத்தப்பட்ட ஹெல்த் பூஸ்டர்களுடன் கூடிய லைஃப் ஆன்யூட்டி மற்றும் பூஸ்டர் வழங்கீடுகளுடன்  லைஃப் ஆன்யூட்டி ஆகியவை தனித்துவமானவை. இந்த தனித்துவமான வேறுபட்ட வகைகள் , வருடாந்திர தயாரிப்புகளைத் தேடும் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது அவர்களின் உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை தேவைகளைப் பூர்த்தி செய்ய, கூடுதல் பணப்புழக்கத்துடன், உத்தரவாதமான, வாழ்நாள் முழுவதும் வருவாயை, வழங்குகிறது.

விரைவுபடுத்தப்பட்ட ஹெல்த் பூஸ்டர்களின் விருப்பத்துடன், வாடிக்கையாளர் தினசரி வாழ்க்கைச் செயல்பாடுகளைச் செய்வதில் உள்ள சிரமங்களைக் கண்டறிந்து கூடுதல் பணம் பெறுகிறார். இந்த கூடுதல் பணப்புழக்கம் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இது வாடிக்கையாளர்களுக்கு மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க உதவும்.

பூஸ்டர் பேஅவுட் விருப்பமானது , தனிநபர்களுக்கு, அவர்களின் ஆண்டுத் தொகைக்கு கூடுதலாக, ஐந்து மொத்த தொகை வழங்கீடுகளை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள், தங்கள் ஓய்வுக்குப் பிந்தைய இலக்குகளை, அதாவது பயணம் செய்வது, பொழுதுபோக்கைத் தொடங்குவது அல்லது பேரக்குழந்தைக்குப் பரிசளிப்பது போன்றவைகளை திட்டமிட்டு அடைய இந்த காலமுறை  வழங்கீடுகள்  உதவும்,

ஐசிஐசிஐ ப்ரூ  கேரண்டீட்  பென்ஷன்  பிளான் பிலெக்ஸி ன் ஜாயிண்ட்  லைப்  ஆன்யூட்டி விருப்பமானது, பிரீமியம் செலுத்தும் காலத்தின் போது முதல் நிலை வைத்திருப்பவரின் மரணம் ஏற்பட்டால், பிரீமியம்  தள்ளுபடி சலுகையுடன்  வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஒத்திவைப்பு காலத்தின் முடிவில், இரண்டாவது அல்லது கூட்டு வைத்திருப்பவர், வாழ்நாள் முழுவதும், உத்தரவாதமான வழக்கமான வருமானத்தைப் பெறுவதை உறுதிசெய்யும் போது, ​​அனைத்து எதிர்கால பிரீமியங்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. கூட்டு வைத்திருப்பவரின் மறைவுக்குப் பிறகு, முதலீடு செய்யப்பட்ட மொத்த பிரீமியங்கள், நியமிக்கப்பட்டவர்(களுக்கு) செலுத்தப்படும், இது ஒரு மரபுத் திட்டமிடல் உபகரணமாக  செயல்படும்.

இந்த திட்டம்,  பிரீமியத்தைத் திரும்பப் பெறுவதற்கும், குறிப்பிட்ட முக்கியமான நோய்கள் அல்லது நிரந்தரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், பாலிசியை ஒப்படைப்பதற்கான விருப்பத்திற்கும் அனுமதிக்கிறது. இது, வாடிக்கையாளர்கள், மருத்துவ சிகிச்சைக்காக நிதியைப் பயன்படுத்த முடியும் என்பதை  உறுதி செய்கிறது.

ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸின் தலைமை விநியோக அதிகாரி திரு. அமித் பால்டா கூறுகையில், “தொற்றுநோய் வாழ்வாதாரத்தை சீர்குலைத்துள்ளது, இதனால் தனிநபர்கள் சேமிப்பு மற்றும் வருமானத்தைப் பாதுகாப்பதில், குறிப்பாக ஓய்வுபெறும்போது ,  அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பொதுவாக, வருடாந்திர திட்டங்களை,  மொத்தத் தொகை பிரீமியம் செலுத்துவதன் மூலம் வாங்கலாம். எனவே, ஐசிஐசிஐ ப்ரூ  கேரண்டீட்  பென்ஷன்  பிளான் பிலெக்ஸி ஆனது, விரும்பிய ஓய்வுக்கால சேமிப்புக் குவியலை  உருவாக்க, நீண்ட காலத்திற்கு பணவசதிக்கு ஏற்ற வழக்கமான பங்களிப்புகள், செய்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு, நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான பிரீமியம் செலுத்தும் இந்த  விருப்பம், நாட்டின் மக்கள்தொகையில் பெரும் பகுதியினர், தங்களுடைய பொன்னான ஆண்டுகளை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு, உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். உணர்திறன் கொண்ட வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நீண்டகால சேமிப்புத் தேவைகளுக்கு, சேவை செய்யும், ஒரு நீடித்த நிறுவனத்தை உருவாக்குவதற்கான எங்கள் பார்வைக்கு ஏற்ப இது அமைந்துள்ளது.

வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அமைப்பாக, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தயாரிப்புகளை உருவாக்க, நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம், அதே நேரத்தில் எங்கள் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் அவர்களுக்கு பாலிசி வாழ்க்கைச் சுழற்சி முழுவதும் அதிவேகமான மற்றும் தொந்தரவு இல்லாத அனுபவத்தை வழங்குகிறது. பல்நோக்கு மற்றும் புதுமையான வருடாந்திர திட்டமான , ஐசிஐசிஐ ப்ரூ  கேரண்டீட்  பென்ஷன்  பிளான் பிலெக்ஸி, பணம் செலுத்தீடுகள் செய்வதன்  மூலம், கூடுதல் பணப்புழக்கத்தை வழங்குகிறது, இது, வாடிக்கையாளர்கள் நிதி இலக்குகளை அடைய அல்லது மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளை சந்திக்க உதவுகிறது. நடைமுறை மாதிரியாக, தனி நபர்களுக்கு, தங்கள் ஓய்வுக்கு முந்தைய வருமானத்தில் 70% -90% வரை, வசதியான ஓய்வு பெற்ற வாழ்க்கையை நடத்துவதற்கு தேவைப்படுகிறது. அதிகரித்து வரும் விலைகள், அதிகரித்து வரும் சுகாதாரச் செலவுகள் மற்றும் அதிக ஆயுள் எதிர்பார்ப்பு  ஆகியவற்றால், தனிநபர்கள் தங்கள் நிதித் தொகுப்பில் வருடாந்திரத் திட்டத்தை வைத்திருப்பது கட்டாயமாகும்.

Leave a Reply

Your email address will not be published.