அப்போலோ மருத்துவமனை மார்பில் மீண்டும் வளரக்கூடிய மிகவும் அரிதான பெரிய கட்டியை சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி சாதனை!
மூலம் வெற்றிகரமாக அகற்றி சாதனை!
ஆசியாவின் மிகப் பெரிய, நம்பகமான மல்டி
ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக முன்னணி வகிக்கும் சென்னை அப்போலோ
மருத்துவமனை, 50 வயது வங்காள தேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மிகவும்
அரிதாக மீண்டும் மீண்டும் வரக் கூடிய, மார்பு சுவரில் ஏற்பட்ட
காண்ட்ரோஸ்கார்கோமா (Chondroscarcoma) கட்டியை வெற்றிகரமாக அகற்றி
சாதனைப் படைத்துள்ளது. பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய அனுபவம்
வாய்ந்த குழு, தனி சிறப்பு வாய்ந்த அறுவை சிகிச்சை மூலம் இந்த கட்டியை
அகற்றி அந்நோயாளியின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. கட்டி மிகவும்
பாதுகாப்பாக அகற்றப்பட்டு, செயற்கை பொருள்கள் மற்றும் பின்புற திசுக்களை
பயன்படுத்தி மார்பு சுவர் மீண்டும் சரிசெய்யப்பட்டது. ஒரு சிறிய வலையில் (mesh)
நிரப்பப்பட்ட எலும்பு சிமென்ட் [bone cement] மூலம் மார்பெலும்பு சரிசெய்யப்பட்ட
பிறகு ஒரு புதிய மார்பு சுவர் உருவாக்கப்பட்டது.
வங்காள தேசத்தைச் சேர்ந்தவர் 50 வயதான திரு. அப்துல்லா. இவரது
மார்பு சுவரில் விலா எலும்பிலிருந்து ஒரு கட்டி உருவாகி வருவதால்
பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு
தெரிவிக்கப்பட்டது. முன்னதாக நவம்பர் 2020-ல் இவரது மார்பு சுவரில் இருந்த
கட்டி கொஞ்சம் கொஞ்சமாக வீங்கத் தொடங்கியது. டிசம்பர் 2020-ல் அவரது
சொந்த நாடான வங்காள தேசத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
இதற்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த கட்டி
கான்ட்ரோஸ்கார்கோமா [chondrosarcoma] கட்டி என்பது கண்டறியப்பட்டது. இது
விலா எலும்பு முதுகெலும்புடன் இணைக்கும் குருத்தெலும்புகளில் இருந்து
உருவாகும் கட்டியாகும்.
வங்காளதேசத்தை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் கட்டியுடன் அவரது
முதல் மற்றும் இரண்டாவது இடது விலா எலும்பையும் சேர்த்து அகற்றினார்.
ஆனால் துரதிருஷ்டவசமாக, மே 2021-ல் அறுவை சிகிச்சை செய்த 6
மாதங்களுக்குள், அவரது கட்டி மீண்டும் வளர்ந்தது. இந்த முறை பெரியதாகவும்
மிகவும் வேகமாகவும் வளர்ந்தது. வங்க தேசத்தில் நிபுணர்களும், உயரிய அறுவை
சிகிச்சைக்கான உள்கட்டமைப்புகளும் கொண்ட மருத்துவமனைகள் இல்லாத
காரணத்தால், இந்தியாவில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனைகளில் மருத்துவ
ஆலோசனை பெற திரு.அப்துல்லா முடிவு செய்தார்.
கான்ட்ரோஸ்கார்கோமாவுக்கு மிகவும் ஆற்றல் வாய்ந்த சிகிச்சை என்பது
அறுவை சிகிச்சையாகும். இருப்பினும் அவரது மார்பு சுவரில் உள்ள கட்டி
பெரியதாகவும், பரவியதாகவும் காணப்பட்டது. அதில் முக்கியமாக கழுத்து
பகுதிகள் மற்றும் இதயத்திலிருந்து செல்லும் முக்கிய நரம்புகள் ஆகியவை
உள்ளன. அப்போலோ மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பாக மற்றொரு
மருத்துவமனையில் அவருக்கு கட்டியை கரைக்கும் முயற்சியாக, அந்த சிகிச்சை
தரமானதாக இல்லாத போதிலும், கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது.
கீமோதெரபி மற்றும் புற்று நோய் சிகிச்சை அளித்த போதிலும் அவரது மார்பு
சுவரில் இருந்த கட்டி குறையவில்லை. அதற்கு பதிலாக அதன் அளவு மேலும்
மேலும் வளர்ந்து கொண்டேதான் இருந்தது.
சென்னை, அப்போலோ மருத்துவமனையின், சர்ஜிக்கல் ஆன்காலஜி மற்றும்
ரோபோடிக் சர்ஜரி பிரிவின் மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் அஜித் பை (Dr.
Ajit Pai, Senior Consultant in Surgical Oncology and Robotic Surgery, Apollo Hospitals)
கூறுகையில், “கட்டி மூன்று பகுதிகளாக காணப்பட்டது. ஒவ்வொன்றும் கழுத்து,
மார்பு சுவர், மார்பின் உள்பகுதி ஆகியவற்றில் காணப்பட்டது. மேலும் இக்கட்டிகள்
கழுத்து இதயம், நுரையீரல் உள்ளிட்டவற்றில் உள்ள முக்கிய பாகங்களை
அழுத்திக் கொண்டிருந்தது. இதனால் நோயாளி சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை
எதிர்கொண்டார். மேலும் விழுங்குவதிலும் சிரமம் ஏற்பட்டதுடன், நெஞ்சில்
வலியையும் உருவாக்கியது. கட்டியின் சிக்கலான நிலையும், சிகிச்சையில்
வெற்றிக்கான குறைந்தபட்ச வாய்ப்புகள் காரணமாகவும் இந்தியாவில் உள்ள
பல்வேறு மருத்துவமனைகளும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய தயக்கம்
காட்டின” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்த சிக்கலான சூழலில், அவர் எங்களிடம்
சிகிச்சைக்கு வந்தார். அவரை முழுமையாக பரிசோதனை செய்தோம். அவரை
ஸ்கேன் செய்து பார்த்த போது, மார்பு சுவர், கழுத்தில் உள்ள மத்திய மார்பு
எலும்பு, காலர் எலும்பு, விலா எலும்புகள், மார்பு மற்றும் கழுத்தில் உள்ள முக்கிய
நரம்புகள் (aorta, carotid and subclavian Vessels) மூச்சு குழாய் (trachea) ஆகியவற்றில்
கட்டி இருப்பது தெரிய வந்தது” என்றார்.
புற்று நோயியல் அறுவை சிகிச்சை நிபுணர், மூத்த மருத்துவ ஆலோசகர்
டாக்டர் அஜித் பை தலைமையில் வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர்
ராஜராஜன் வெங்கடேசன், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.எம்.
யூசுப், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அருண் கண்ணன்,
பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் சேப்பாக்கம் ரமேஷ், இருதய மயக்க மருந்து
நிபுணர் பாஸ்கர் [Dr Ajit Pai, Senior Consultant in Surgical Oncology with support from the
Dr Rajarajan Venkatesan, Vascular surgeon, Dr MM Yusuf, Cardiothoracic Surgeon, Dr Arun
Kannan, Orthopedic Surgeon, Dr Dr. Chepauk Ramesh, Plastic and Reconstructive Surgeon
and Dr Bhaskar, Cardiac Anesthetist] ஆகியோர் கொண்ட நிபுணர்கள் குழு
மேற்கொண்ட விரிவான ஆய்வின் அடிப்படையில், அவர்களின் ஆதரவுடன்
அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. பிப்ரவரி 25, 2022 அன்று
நோயாளிக்கு 14 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும்
அவரது கட்டியுடன் மார்பெலும்பின் ஒரு பகுதி, ஒவ்வொரு பக்கத்திலும் 3 விலா
எலும்புகள், மற்றும் காலர் எலும்புகள் ஆகியவையும் முற்றிலுமாக
அகற்றப்பட்டன. அறுவை சிகிச்சைக்கு முந்தைய மிகச் சரியான திட்டமிடல்
மற்றும் துல்லியமான அறுவை சிகிச்சையின் காரணமாக முக்கியமான ரத்த
நரம்புகள் எந்தவித பாதிப்பும் இன்றி பாதுகாக்கப்பட்டன. பிளாஸ்டிக் சர்ஜரி
நிபுணரால் மார்பு சுவர், செயற்கை பொருள்கள் மற்றும் பின்புற திசுக்களை
பயன்படுத்தி மீண்டும் புதிதாக உருவாக்கி பொருத்தப்பட்டது. ஒரு சிறிய
வலையில் (mesh) நிரப்பப்பட்ட எலும்பு சிமென்ட் மூலம் மத்திய பகுதி
மார்பெலும்பு சரிசெய்யப்பட்டதுடன் ஒரு புதிய மார்பு சுவரும் உருவாக்கப்பட்டது.
மருத்துவ குழுவினர்களின் சாதனையை பாராட்டி அப்போலோ
மருத்துவமனை குழுமத்தின் துணை தலைவர், பிரீதா ரெட்டி (Ms. Preetha Reddy, Vice
Chairperson, Apollo Hospitals group) கூறுகையில், “சரியான தொழில்நுட்பத்தை
பயன்படுத்துவதும், அதை மருத்துவ நிபுணத்துவத்துடன் இணைப்பதும் நிச்சயம்
அற்புதங்களை நிகழ்த்த உதவும் என நாங்கள் எப்போதும் நம்புகிறோம். அதற்கு
இந்த சிகிச்சை ஒரு சிறப்பான எடுத்துகாட்டு. நோயாளிகளுக்கு சிகிச்சை
அளிப்பதில் உயர்ந்த தரத்தை கடைபிடிப்பதில் நாங்கள் மிகழ்ச்சி அடைகிறோம்.
அப்போலோ மருத்துவமனைகளில், நாங்கள் மேற்கொள்ளும் அனைத்து
சிகிச்சைகளிலும் நோயாளிகளுக்கு முன்னுரிமை அளித்து, மிகவும் செலவு
குறைவானதும், ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலுமான உலகத் தரம் வாய்ந்த
சிகிச்சையை நாங்கள் வழங்கி வருகிறோம். மிகவும் தீவிரமான பாதிப்பில் உள்ள
நோயாளிகளுக்கு இத்தகைய மருத்துவ சாதனைகள் அவர்களின் வாழ்க்கையை
மாற்றும் என நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.
சிசியூவில் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய தீவிர சிகிச்சைகள்
அளிக்கப்பட்டதால், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மிகப் பெரிய சிக்கல்கள் ஏதும்
இன்றி திரு. அப்துல்லா மிக நன்றாக குணமடைந்தார். பயாப்ஸி அறிக்கையானது
அவருக்கு முற்றிலும் மிகப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பதையும், கட்டி
முழுமையாக அகற்றப்பட்டு விட்டதையும் உறுதி செய்தது. மேலும் தற்போது
அறுவை சிகிச்சைக்கு உதவி புரியும் வகையில் அவருக்கு கதிர் வீச்சு சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இது ஒரு தொலைதூர
சாத்தியமாக தென்பட்ட நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட அறுவை
சிகிச்சையும், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியிராத நிலையும்,
அவருக்கு ஒரு புதிய வாழ்க்கையையும் அவர் குணமடைவதற்கான வாய்ப்பைுயம்
ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
அப்போலோ மருத்துவமனை குறித்து
1983-ல், டாக்டர் பிரதாப் சி ரெட்டி இந்தியாவில் முதன்முறையாக
கார்ப்பரேட் மருத்துவமனையான அப்போலோ மருத்துவமனையை சென்னையில்
தொடங்கினார். இன்றைக்கு, ஆசியாவிலேயே மிகவும் முன்னணியில் உள்ள
ஒருங்கிணைந்த மருத்துவமனையாக திகழ்கிறது. 12 ஆயிரத்துக்கும் அதிகமான
படுக்கை வசதிகள் கொண்ட 72 மருத்துவமனைகள், 4500 மருந்தகங்கள், 120-க்கும்
அதிகமான ஆரம்ப சிகிச்சை மையங்கள், 700 மருத்துவ பரிசோதனை மையங்கள்.
500-க்கும் அதிகமான டெலி கிளினிக்குகள், 15-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்வி
மையங்கள், உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளில் கவனம் செலுத்தும்
வகையிலான ஒரு ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றை கொண்டுள்ளது. அதன்
அண்மைய முதலீடாக, தென்கிழக்கு ஆசியாவின் முதல் புரோட்டான் சிகிச்சை
மையம் சென்னையில் தொடங்கப்பட்டது.
சர்வதேச தரத்திலான சுகாதார சேவை ஒவ்வொரு தனிநபரையும்
சென்றடைய வேண்டும் என்ற அதன் லட்சியத்துடன், ஒவ்வொரு நான்கு
நாட்களுக்கு ஒரு முறை லட்சக்கணக்கான மனிதர்களின் வாழ்வோடு நெருங்கிய
தொடர்பை மேற்கொண்டு வருகிறது. மிகவும் அரிதான பெருமைக்குரிய
வகையில், அப்போலோவின் மருத்துவ பங்களிப்பை போற்றும் விதமாக இந்திய
அரசு சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனைகள்
குழுமத்தின் தலைவர், டாக்டர் பிரதாப் சி ரெட்டி அவர்கள் 2010-ல் நாட்டின்
உயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷன் அளித்து கெளரவிக்கப்பட்டார்.
கடந்த 37 ஆண்டுகளாக, அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் மருத்துவ
கண்டுபிடிப்புகள், உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவை, நவீன தொழில் நுட்பம்
ஆகியவற்றில் தொடர்ந்து சிறந்து விளங்கி வருவதுடன் தலைமைத்துவத்தையும்
தொடர்ந்து பேணி வருகிறது. அதன் மருத்துவமனைகள் மேம்பட்ட மருத்துவ
சேவைகளுக்காக நாட்டின் சிறந்த மருத்துவனைகளின் தர வரிசையில் தொடர்ந்து
இடம் பெற்று வருகின்றன.