நாங்களும் பலமான கூட்டணி வைத்திருக்கிறோம். தமிழ் மக்களோடு கூட்டணி வைத்துள்ளோம். இந்த கூட்டணியை விட வேறு எது பலமான கூட்டணி?

By admin Mar14,2024

இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு நோன்பு திறந்தார்.

அப்போது மேடையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ” நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கின்ற காரணத்தினால் இந்த ஆண்டு முன்னதாகவே இதான் நோன்பு திறக்கும் நிகழ்வை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

ஜெயலலிதாவின் விசுவாசம் மிக்க தொண்டர்களான நாம் தொடர்ந்து இந்த நோன்பு திறப்பு நிகழ்வை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அதிமுக சாதி மதத்திற்கு அப்பாற்பட்டது. அதிமுகவின் அவைத் தலைவராக இருக்கக்கூடிய தமிழ் மகன் உசேன் ஒரு இஸ்லாமியர் என்பதில் பெருமை கொள்கிறோம்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்போடு வாழ்ந்தார்கள்.

இன்றைய திமுக ஆட்சியில் சிறுபான்மையான மக்கள் உள்ளிட்ட மக்கள் அச்சத்துடன், பல இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலை மாற, மன அமைதியுடன் வாழ்வதற்கு ஒற்றுமையுடன் பணியாற்றி அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வோம்.

((அராஜக வழியில் செல்பவர்களை விட அமைதியான வழியில் செல்பவர்களுக்கு தான் இறுதியான, உறுதியான வெற்றி கிடைக்கும்.

என நபிகள் நாயகத்தின் கதையை சொல்லி திமுகவை சாடியதோடு, இதை திமுக பற்றி கூறியதாக நினைத்தால் நான் பொறுப்பாளி அல்ல என பேசிய எடப்பாடி))

நாங்களும் பலமான கூட்டணி வைத்திருக்கிறோம். தமிழ் மக்களோடு கூட்டணி வைத்துள்ளோம். இந்த கூட்டணியை விட வேறு எது பலமான கூட்டணி? நாடாளுமன்ற தேர்தலில் அது தெரியத்தான் போகிறது. திமுகவின் ஆட்சி முடியத்தான் போகிறது.

ரமலான் சீரும் சிறப்புமாக ஏற்றமாக அமைய வாழ்த்துகிறேன்.

சமிபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது குறிப்பிட்டுள்ளார். அதிமுக பாஜகவோடு கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்வதாக சொல்லி இருக்கிறார்.

அதிமுக எப்போதும் நேர் பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது. திமுகவை போல எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்தால் கருப்புக்கொடி காட்டுவது, கருப்பு பலூன் விடுவது, Go Back Modi என்று சொல்வது,

ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமரை அழைத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்து Welcome Modi என்று சொல்வது திமுக தான். நாங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரி தான் இருப்போம்”, என்றார்.

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *