காரடையான் நோன்பு

By admin Mar11,2024

வியாழக்கிழமை – குரு வாரம் – நண்பகல் 12.36 மணியளவில் பங்குனி மாதம் பிறக்கிறது. – மீன ராசியில் சூரிய பகவான் பிரவேசம்

14/3/2024 அன்று காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் பூஜை செய்து நோன்பு சரடு கட்டிக்கொள்ள உத்தமம்………

காரடையான் நோன்பு
விபரம்

பங்குனி மாத தொடக்கத்திலேயே வரும் முதல் வழிபாடு, முதல் பண்டிகை
காரடையான் நோன்பு ஆகும்.

பங்குனி மாத முதல் நாளில், மாசி மாதம் கடைசியில் காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.

இந்த வருடம் 14.03.2024 வியாழக்கிழமை நண்பகல் 12.36 மணிக்கு பங்குனி மாதம் பிறக்கிறது.

அன்று காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் சுமங்கலிகள் மற்றும் கன்னி பெண்கள், பெண் குழந்தைகள் நோன்பு சரடு கட்டிக் கொள்வது நல்லது.

காரடையான் நோன்பு
கார் காலத்தில் விளைந்த நெல்லைக் கொண்டு அடை செய்து கௌரி ஆகிய காமாட்சி அம்மனை சாவித்திரி வழிபட்டதால் இது காரடையான் நோன்பு என்று அழைக்கப்படுகிறது.

சாவித்திரி என்ற‌ பெண் இவ்வழிபாட்டினை மேற்கொண்டு யமனிடமிருந்து தன்னுடைய கணவனின் உயிரினை மீட்டதால் இவ்விரதம் சாவித்திரி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.

இவ்விரத முறையானது மாசி மாதக் கடைசி நாள் தொடங்கப்பட்டு பங்குனி முதல் நாள் நிறைவு பெறுகிறது.

இவ்வழிபாட்டில் இடம் பெறும் நோன்புக் கயிறானது வழிபாடு முடிந்ததும் பெண்களால் அணியப்படுவது குறிப்பிடத் தக்கது.

இவ்விரத முறையினை திருமணமான பெண்கள் மேற்கொள்வதால் தங்கள் கணவனின் ஆயுள் நீடிப்பதோடு, அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வினை அம்மன் வழங்குவதாகவும் கருதுகின்றனர். மேலும் இவ்விரதத்தை, கல்யாணம் ஆக வேண்டிய கன்னிப் பெண்கள் கடைப்பிடிப்பதால் ‌அன்னை ஸ்ரீ காமாக்ஷி கடாக்ஷத்தால், ஸ்ரீ மஹாலக்ஷ்மி கடாக்ஷத்தால், மனம் போல் மாங்கல்யம் தேடி வரும்.
 
காரடையான் நோன்பு அதிக விபரம்

ஸங்கல்பம் :

மம தீர்க்க ஸௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம் மம பர்த்துஸ்ச அந்யோந்ய ப்ரீதி அபிவ்ருத்யர்த்தம் அவியோகார்த்தம் ஸ்ரீ காமாக்ஷி பூஜாம் கரிஷ்யே

த்யானம் :

ஸந்த்ராபீடாம் ஸதுரவதநாம் ஸஞ்ஜலாபாங்க லீலாம் குந்தஸ்மேராம் குஸபரநதாம் குந்தளோத்தூத ப்ருங்காம் மாராராதே: மதனஸிகினம் மாம்ஸளம் தீபயந்தீம் காமாக்ஷீம் தாம் கவிகுலகிராம் கல்பவல்லீ முபாஸே

(சந்திரனை சிரசில் ஆபரணமாக தரித்தவளும் அழகிய திருமுகத்தை உடையவளும் சஞ்சலமான கடாட்ச லீலையை உடையவளும் குந்தபுஷ்பம் போல் அழகை உடையவளும் ஸ்தன பாரத்தினால் வணங்கிய சரீரத்தை உடையவளும் முன் நெற்றி முடியினால் விரட்டப்பட்ட கரு வண்டுகளை உடையவளும் மன்மதனை சாம்பலாக்கிய ஈசனுக்கு காமாக்னியை விருத்தி செய்கிறவளும் கவிகளின் வாக்கிற்கு கல்பவல்லியாக இருப்பவளும் ஆன காமாட்சி தேவியை உபாசிக்கிறேன்)

த்யான ஸ்லோகம் :

ஏகாம்பரநாத தாயிதாம் காமாக்ஷீம் புவனேஸ்வரீம் த்யாயாமி ஹ்ருதயே தேவீம் வாஞ்சிதார்த்த ப்ரதாயிநீம் காமாக்ஷீம் ஆவாஹயாமி

சரடு கட்டும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் :

தோரம் க்ருஷ்ணாமி ஸுபகே ச ஹரித்ரம் தாராம்யஹம் பர்த்துஹூ ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீத பவ ஸர்வதா

நைவேத்யம் செய்யும் போது …

“உருகாத வெண்ணையும் ஓரடையும் நூற்று உனக்கு நான் தருவேன் ஒருநாளும் என் கணவர் என்னை விட்டு பிரியாது இருக்க அருள் தருவாய் அம்மா.

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *