பசி போக்கும் அன்னை

எல்லா உயிர்களுக்கும் பொதுவானது பசி.அதன் கொடுமை அனுபவித்தவருக்கே தெரியும்.
🪶பசி,பட்டினி இல்லாமல் வாழும் நாட்டில் தான் ஒழுக்கம் இருக்கும்.ஏனெனில்,அங்குள்ள மக்கள் தவறான வழிகளில் செல்ல மாட்டார்கள்.
🪶பசியை அழிக்கும் வலிமை பெற்றவள் அன்னபூரணி.இவளுக்கு மத்திய பிரதேசத்தில் உள்ள இந்துாரில் கோவில் உள்ளது.
🪶இங்கு வருவோருக்கு ‘இந்துார் இருக்க மற்ற ஊர் எதற்கு’ என்னும் எண்ணம் ஏற்படும்.
🪶ஒரு சமயம் பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை மூட உலகமே இருண்டது.கோபம் கொண்ட சிவனின் சாபத்தால் பார்வதி முகப்பொலிவை இழந்தாள்.அவள் விமோசனம் வேண்ட ”காசியில் சத்திரம் அமைத்து அடியார்களுக்கு அன்னதானம் செய்.முகம் பொலிவு பெறும்”என்றார் சிவன்.
🪶அதைப் பின்பற்றி சாபம் நீங்கப் பெற்று ‘அன்னபூரணி’ என அழைக்கப்பட்டாள்.
🪶தென்னிந்திய பாணியில் இவளுக்கு இங்கு கோவில் கட்டப்பட்டது.இது 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது.கோபுரத்தின் உயரம் 100 அடி.வாசலின் இருபுறமும் கருப்பு நிற பளிங்கு கல் யானைகள் உள்ளன.உள்ளே நுழைந்தவுடன் பிரம்மாண்ட மண்டபம்,அதனையடுத்து கருவறையில் துர்கை,சரஸ்வதி,அன்னபூரணி சன்னதிகள் உள்ளன.
🪶அன்னபூரணியின் அருகில் அன்ன பாத்திரமும்,கரண்டியும் உள்ளன.
🪶தீபாவளியன்று தங்க பாத்திரத்தில் தங்க கரண்டியுடன் அம்மனை தரிசிக்கலாம்.அன்று நடக்கும் ‘அன்னகூட்’ என்னும் உற்சவத்தில் இனிப்பு,கார வகைகள் ஏராளமாக தயாரிக்கப்பட்டு நைவேத்யம் செய்யப்படும்.
🪶வட இந்தியாவில் பார்வதியை விட அவளது அம்சமான துர்கைக்கே முதலிடம் தரப்படுகிறது.அவளுக்கு வலது புறம் சரஸ்வதியும்,இடது புறம் காளியும் உள்ளனர்.இங்கு 15 அடி உயர வெள்ளை சலவைக் கல்லால் ஆன சிவன் இருக்கிறார்.
🪶பிரகாரத்தில் கிருஷ்ணரின் வாழ்வில் நடந்த சம்பவங்களை ஓவியங்களாக தீட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.